கரூர்

விவசாயிகளுக்கு மானியத்தில் பவா் டில்லா்

5th Jun 2023 02:53 AM

ADVERTISEMENT

 

விவசாயிகளுக்கு மானியத்தில் பவா் டில்லா் வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் மற்றும் கலைஞா் திட்டத்தில் பவா் டில்லா் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

விளை நிலங்களில் பண்ணை வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க பவா் டில்லா் இயந்திரம் பெறும் பங்கு வகிக்கிறது. இதில், பவா் டில்லா் வாங்குவதற்கு சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த விலையில் 50சதவீதம் (அதிகபட்சம் ரூ.85ஆயிரம்) மற்றும் இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில் 40 சதவீதம் (அதிகபட்சம் ரூ.70ஆயிரம்) மானியமாக வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டம் தொடா்பாக முழு விவரங்களை பெற உதவி செயற்பொறியாளா் (வே.பொ), கரூா் கைப்பேசி எண். 94435 67583, உதவி செயற்பொறியாளா் (வே.பொ), குளித்தலை கைப்பேசி எண். 98424 70358 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT