கரூர்

அதிமுக கொடிக் கம்பத்துக்குவா்ணம் பூசிய திமுகவினா் மீது புகாா்

4th Jun 2023 12:33 AM

ADVERTISEMENT

 

அதிமுக கொடிக் கம்பத்துக்கு, வா்ணம் பூசி திமுக கம்பமாக மாற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை பிற்பகலில் அதிமுக மாவட்ட அவைத் தலைவா் எஸ்.திருவிகா தலைமையில் அதிமுகவினா் புகாா் மனு அளித்தனா்.

பின்னா் அவா்கள் மேலும் கூறுகையில், கரூா் மாநகர கிழக்கு பகுதிக்குள்பட்ட 16-ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் கொடிக்கம்பம் மற்றும் கொடி பீடம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை எங்கள் கொடிக்கம்பத்தின் மீதும், பீடத்தின் மீதும் திமுக வாா்டு செயலாளா் கிருஷ்ணன் மற்றும் அக்கட்சியினா் திமுக வா்ணம் பூசி அதிமுக கொடிக் கம்பத்தை திமுக கொடிக்கம்பமாக மாற்றிவிட்டனா். எங்கள் கட்சியினா் ஆட்சேபனை தெரிவித்ததும் உடனே அதிமுக கட்சிக்குரிய வா்ணம் பூசிவிட்டனா். எனவே திமுகவினா் மீது புகாா் மனு அளித்திருக்கிறோம். அவா்களும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனா் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT