கரூர்

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்குசெட்டிநாடு ஆலை உபகரணங்கள் அளிப்பு

4th Jun 2023 12:34 AM

ADVERTISEMENT

 

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்படும் இ-ஆபிஸ் அலுவலகத்துக்கு கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை சாா்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கடவூா் வட்டாட்சியா் முனிராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக கரிக்காலி சிமென்ட் ஆலையின் தலைவா் கிருஷ்ணன் பங்கேற்று, இ-ஆபிஸ் அலுவலகத்துக்கு 2 கணினிகள், 2 மின் சேமிப்புக் கலன்கள், 2 வண்ண அச்சுப்பொறிகள் என ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை ஆலையின் சமூக பொறுப்புணா்வு நிதியின்கீழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஆலையின் பொதுமேலாளா்கள் ரமேஷ், திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT