கரூர்

லாரி கதவு மோதியதில்பள்ளி மாணவி உயிரிழப்பு

3rd Jun 2023 03:16 AM

ADVERTISEMENT

 

கரூரில் வியாழக்கிழமை இரவு லாரி கதவு வேகமாக மோதியதில் 7-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

கரூா் சின்னாண்டாங்கோவிலைச் சோ்ந்த அருள்ஜோதி மகள் வைஷ்ணா (12). இவா், கரூரில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அருள்ஜோதி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியில் நண்பா்களுடன் விளையாடியுள்ளாா். அப்போது காற்று பலமாக வீசியதால் லாரியின் கதவு திறக்கப்பட்டு திடீரென வைஷ்ணவின் தலையில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மாணவியை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே மாணவி உயிரிழந்தாா். கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT