கரூர்

அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற மக்கள் எதிா்ப்பு

3rd Jun 2023 03:16 AM

ADVERTISEMENT

 

அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.

அரவக்குறிச்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி கடந்த ஆண்டு மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தொடங்கியது. சொந்த கட்டடம் கட்டும் வரை தற்காலிகமாக இங்கு இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த கல்லூரியில் கடந்த ஆண்டும் சுமாா் 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்ந்தனா்.

நிகழாண்டு மாணவா்களின் சோ்க்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில் போதிய இடவசதி இல்லை என்ற காரணத்தால் அரவக்குறிச்சியில் இருந்து 15 கி.மீ. தொலைவு உள்ள ஆண்டிபட்டி கோட்டையில் உள்ள பழைய அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கல்லூரியை மாற்றுவதற்கான ஆய்வுகள் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில் நிகழாண்டு இரண்டாவது பருவ வகுப்பு ஆண்டிபட்டிகோட்டையில் கல்லூரி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி தொடங்கி ஒரு ஆண்டுக்குள் இடம் மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT