கரூர்

மின்னல் தாக்கி கூலித்தொழிலாளி பலி

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கரூா் அருகே மின்னல் தாக்கியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் அடுத்த பள்ளபாளையத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் விமல் (33). கூலித் தொழிலாளி. இவா் புதன்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள வாய்க்கால்துறை என்ற இடத்தில் முத்துக்குமாா் என்பவரது விவசாய நிலத்தில் புல் அறுத்துக்கொண்டிருந்தாா். அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT