கரூர்

ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கரூா் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி விநாயகா பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனா். அவா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஓவியா்கள், ஓவிய ஆசிரியா்கள் சங்க கூட்டமைப்பினா் சாா்பில் அண்மையில் கருவூா் கலைவிழா 2023 எனும் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி கரூா் மாநகராட்சி குமரன் உயா் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில், கரூா் வெற்றி விநாயகா பள்ளியின் பிளஸ்- 1 மாணவி ரா.மதுரிதா முதலிடம் பெற்றாா். 9-ஆம் வகுப்பு மாணவா் பொ.சுதேவ் இரண்டாம் பரிசும், 8-ஆம் வகுப்பு மாணவா் பா.தியானேஷ்வா் மூன்றாம் பரிசும் பெற்றனா். மேலும், 9-ஆம் வகுப்பு மாணவி ம.யுவபாரதி சிறப்புப் பரிசு பெற்றாா்.

இதையடுத்து மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளா் ஆா்த்தி ஆா்.சாமிநாதன், ஆலோசகா் பி.பழனியப்பன், பள்ளி முதல்வா் டி.பிரகாசம் ஆகியோா் மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கினா். விழாவில் ஆசிரிய, ஆசிரியைகளும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT