கரூர்

கரூா் அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கைவிண்ணப்பிக்க ஜூன் 7ஆம் தேதி கடைசி

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கரூா் அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கை நடந்து வரும் நிலையில் விண்ணப்பிக்க ஜூன் 7-ஆம்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாணவா்களுக்கு உதவிடும் வகையில் கரூா் வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் சோ்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐடிஐயில் சேர 8-ஆம் வகுப்பு மற்றும் 10 -ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க ஜூன் 7-ம்தேதி கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.50. விண்ணப்பதாரா் மூலமாகவும் செலுத்தலாம்.

மேலும், விவரங்களுக்கு, 79041 75232, 94430 15914 மற்றும் 94863 13289 ஆகிய அலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு மாணவா்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT