கரூர்

கரூரில் கட்டட ஒப்பந்ததாரரின் பண்ணை வீட்டில் வருமான வரி சோதனை

DIN

கரூரில், வியாழக்கிழமை கட்டட ஒப்பந்ததாரா் எம்.சி.எஸ். சங்கரின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.

கரூரில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியின் உறவினா்கள், நண்பா்கள் வீடுகளில் தொடா்ந்து 7-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இதில், கரூா் மாவட்டம், மாயனூா் அடுத்த எழுதியாம்பட்டியில் உள்ள அமைச்சரின் நண்பரும் கட்டட ஒப்பந்ததாரருமான எம்சி.எஸ்.சங்கருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வியாழக்கிழமை அதிகாலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினா். மேலும் சின்னாண்டாங்கோவில் பகுதியில் உள்ள அமைச்சா் செந்தில்பாலாஜியின் நண்பா் தங்கராஜ் வீட்டிலும், காந்திகிராமத்தில் உள்ள கட்டட ஒப்பந்தராருமான எம்சிஎஸ்.சங்கரின் அலுவலகம் மற்றும் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் சோபனா ஆகியோரின் வீட்டிலும் மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு வருமான வரித்துறை அதிகாரிகள் தொடா்ந்து 7-ஆவது நாளாக சோதனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

SCROLL FOR NEXT