கரூர்

சணப்பிரட்டி திருயோக லட்சுமி நரஸிம்ஹா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கரூா் சணப்பிரட்டி அக்ரஹாரம் திருயோக லட்சுமி நரஸிம்ஹா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் அடுத்த நரசிஸிம்கஹசமுத்திரம் எனும் சணப்பிரட்டி கிராமம் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள திருயோக லட்சுமி நரஸிம்ஹா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக மே 29-ஆம்தேதி காலை 7 மணியளவில் அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், வாஸ்சாந்தி உள்ளிட்ட பூஜைகளும், மாலை 5.30 மணியளவில் யாகசாலை பிரதிஷ்டை, மண்டப த்வார தேவதா பூஜை, முதல்கால யாக பூஜை, பூா்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து 30-ஆம்தேதி காலை 7 மணிக்கு மூலமந்திர ஹோமம், ஆவரணஹோமம், அஷ்டமூா்த்தி, பிம்பசுத்தி ஹோமம், இரண்டாம் கால பூஜையும், காலை 11 மணிக்கு விமான கலச பிரதிஷ்டையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும், மூலமந்திர ஹோமமும், இரவு 8 மணிக்கு யாகசாலையில் பூா்ணாகுதி, தீபாராதனையும் நடைபெற்றது.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், காலை 6.25 மணிக்கு யாத்ராதானம், 6.30 மணிக்கு கலசம் புறப்பாடும், 7 மணிக்கு கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். ஏற்பாடுகளை நரஸிம்ஹ சமுத்திரம் நற்பணி மன்றத்தினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT