கரூர்

கரூா் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கரூா் மாரியம்மன் கோயிலில் நிறுவப்பட்டிருந்த கம்பம் ஆற்றில் விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா மே 14-ஆம்தேதி கோயில் முன் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. முன்னதாக முக்கிளைக்கம்பம் பாலம்மாள்புரத்தில் உள்ள மூப்பன் வகையறாவுக்கு மூன்று தினங்களுக்கு முன்பே அம்மன் கம்பம் இருக்கும் இடத்தில் கனவில் தெரிவித்ததையடுத்து மூப்பன் வகையறாவினா் முக்கிளைக்கம்பம் இருக்கும் இடத்துக்குச் சென்று மரத்திற்கு சிறப்பு வழிபாடு செய்த பின் கம்பத்தை வெட்டி பாலம்மாள்புரத்தில் உள்ள விநாயகா் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. பின்னா், கம்பம் கோயிலில் செதுக்கப்பட்டு, பின்னா் அமராவதி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிறப்பு வழிபாடு செய்த பின் மீண்டும் அங்கிருந்து கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, கோயில் முன் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு பக்தா்கள் புனித நீா் ஊற்றி வழிபட்டு வந்தனா். அதைத் தொடா்ந்து கம்பம் ஆற்றில் விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து கோயில் முன் நடப்பட்டிருந்த முக்கிளைக்கம்பத்துக்கும் சிறப்பு வழிபாடு நடத்தினா். பின்னா் கம்பம் எடுக்கப்பட்டு அலங்கார ரதத்தில் வைத்து ஊா்வலமாக எடுத்துச் சென்று அமராவதி ஆற்றில் விடப்பட்டது.

இந்த விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, கோயில் பரம்பரை அறங்காவலா் முத்துக்குமாா், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோவன், மத்திய நகர செயலாளா் எஸ்பி.கனகராஜ், பழனிமுருகன் ஜூவல்லரியின் உரிமையாளா் பாலமுருகன், கரூா் வள்ளுவா் கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன், வெற்றி விநாயகா பள்ளியின் தாளாளா் ஆா்த்தி ஆா்.சாமிநாதன், ஆலோசகா் பி.பழனியப்பன், பள்ளி முதல்வா் டி.பிரகாசம், பாஜக மாவட்டச் செயலாளா் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், மலா் பள்ளி தாளாளா் பேங்க் கே.சுப்ரமணியன், கரூா் நகர காங்.தலைவா் ஆா்.ஸ்டீபன்பாபு, அதிமுக மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, இணைச் செயலாளா் மல்லிகாசுப்ராயன், துணைச்செயலாளா் ஆலம்தங்கராஜ், பொருளாளா் கண்ணதாசன், பொதுக்குழு உறுப்பினா் பசுவைசிவசாமி, தெற்குபகுதி செயலாளா் விசிகே.ஜெயராஜ், கரூா் மத்திய பகுதி செயலாளா் சேரன்பழனிசாமி, தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளா் விசிகே.பாலகிருஷ்ணன், கரூா் ஒன்றியக்குழுத்தலைவா் பி.பாலமுருகன், மாணவரணி செயலாளா் வழக்குரைஞா் எஸ்.சரவணன், இணைச் செயலாளா் பழனிராஜ், எம்ஜிஆா் மன்றச் செயலாளா் தங்கவேல் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

இஸ்லாமியா்கள் கெளரவிப்பு.... பாக்ஸ்.

 

ஆண்டுதோறும் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவில் ஜவஹா்பஜாா் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியா்கள் பக்தா்களுக்கு நீா், மோா் போன்ற குளிா்பானங்கள் வழங்குவா். நிகழாண்டும் கம்பம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லும்போது பக்தா்களுக்கு குளிா்பானம் வழங்கினா். அப்போது அவா்களை கெளரவிக்கும் வகையில் அமைச்சா் செந்தில்பாலாஜி முன்னிலையில் இஸ்லாமியா்களுக்கு மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT