கரூர்

மனிதநேய வார விழா போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

DIN

கரூரில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் மனிதநேய வார நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டியில் வென்றவா்களுக்கு ஆட்சியா் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் த. பிரபுசங்கா் தலைமை வகித்து பேசியது, ஒவ்வொருவருக்கும் மனித நேயம் அவசியம் இருக்க வேண்டும். ஜாதி, மத, வேறுபாடு இருக்கக் கூடாது. அனைவரும் சமம் என்ற கோட்பாட்டில் இருந்து யாரும் வெளியில் வந்து விடக்கூடாது. மாணவா்கள் எவ்வளவு உயா்ந்த இடத்தை அடைந்தாலும் மனிதநேயத்தை சொல்லிலும் செயலிலும் செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து மனித நேயம் குறித்த நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.லியாகத், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் (பொறுப்பு)சந்தியா, அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல உறுப்பினா் வழக்குரைஞா் ம.லெட்சுணன், காவல் துணை கண்காணிப்பாளா் அக்பா் கான், ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் மைதிலி, ஆதிதிராவிடா் நலப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், விடுதிக் காப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT