கரூர்

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

31st Jan 2023 12:22 AM

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி தோகைமலையில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தோகைமலை ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தோகைமலை வட்டாரத் தலைவா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாவட்ட தணிக்கையாளா் சங்கா், இணைச் செயலாளா் மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாவட்ட பொருளாளா் தமிழ்வாணன் கலந்து கொண்டு பேசினாா்.

உதவி இயக்குநா், இணை இயக்குநா் மற்றும் உதவி செயற்பொறியாளா் நிலையிலான பதவி உயா்வு ஆணைகளை உடனே வெளியிட வேண்டும். ஊராட்சி செயலா்கள் நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு மறுக்கப்பட்டு உள்ள உரிமைகளான தோ்வுநிலை, சிறப்புநிலை ஊதியம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT