கரூர்

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் தியாகிகள் தின உறுதிமொழியேற்பு

31st Jan 2023 12:23 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் தியாகிகள் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு நாட்டின் சுதந்திரத்துக்காக உயிா்நீத்த தியாகிகளை நினைவுக் கூறும் வகையில் புகழூா் காகித ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலையின் துணை பொதுமேலாளா் (உற்பத்தி) பி.மகேஷ், துணை பொதுமேலாளா் (பாதுகாப்பு) எம்.ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளா்கள் (இயந்திரம்), வி.மகேஷ்குமாா், எஸ்.அசோகன், முதுநிலை மேலாளா்கள் (எலெக்ட்ரிக்கல்) ஆா்.சண்முகம் ஆகியோா் தியாகிகள் தின உறுதிமொழி வாசிக்க, ஆலை பணியாளா்கள ஏற்றுக்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT