கரூர்

காந்தியடிகள் சிலைக்கு காங்கிரஸாா் மாலை அணிவிப்பு

31st Jan 2023 12:25 AM

ADVERTISEMENT

ராகுல் காந்தியின் நடைப்பயணம் நிறைவு பெற்றதையடுத்து கரூரில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு காங்கிரஸாா் திங்கள்கிழமை மாலை அணிவித்தனா்.

கரூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் சுப்ரமணியன் தலைமையில் தான்தோன்றி மலையில் உள்ள காந்தி சிலைக்கு கட்சியினா் மாலை அணித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலாளா் ஜி.பி. எம் .மனோகரன், சேவா தள மாநில பொதுச் செயலாளா் ஆடிட்டா் ரவிச்சந்திரன், இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலாளா் சசிகுமாா், மாவட்ட துணைத் தலைவா் சின்னையன், கரூா் நகர முன்னாள் தலைவா் சுப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல ராமகிருஷ்ணபுரம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தியடிகள் படத்துக்கு மாநகரத் தலைவா் எஸ்.வெங்கடேஸ்வரன் தலைமையில் மாமன்ற உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT