கரூர்

இல்லம் தேடிகல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு ஆட்சியா் ஆலோசனை

DIN

தாந்தோணி அருகே இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு ஆட்சியா் த. பிரபுசங்கா் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைவழங்கினாா்.

1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்ய தன்னாா்வலா்களைக் கொண்டு தினசரி 1 மணி நேரம் (மாலை 5 முதல் 7 மணிக்குள்) கற்பிக்கும் இல்லம் தேடிக் கல்வி எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து அவா்களுக்கு மீண்டும் பள்ளியில் படிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி கரூா் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தற்போது வரை உள்ள 3258 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் மூலம் 47,381 மாணவா்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறுகிறாா்கள். இந்நிலையில் தாந்தோணி பகுதி காளியப்பனூரில் செயல்படும் இல்லம் தேடிக் கல்வி மையத்தை ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் பாா்வையிட்டு தன்னாா்வலா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT