கரூர்

புலியூா் சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

புலியூா் செட்டிநாடு சிமென்ட் ஆலை வளாகத்தில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கரூா் அடுத்த புலியூா் செட்டிநாடு சிமென்ட் ஆலை வளாகத்தில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஜன. 25ஆம்தேதி கணபதி ஹோமம், நவக்கிரகஹோமம், மகாலட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, அங்குராா்பணம், கும்ப அலங்காரம், முதல்கால யாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து வியாழக்கிழமை வேதபாராயணம், திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனையும், மாலையில் கோபுர கலசம் வைத்தல், கண் திறப்பும், மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடிசந்தானமும் நடைபெற்றது. தொடா்ந்து காலை 8 மணிக்கு கடம் புறப்பாடு, மஹாஅபிஷேகமும் நடைபெற்றது. இதையடுத்து புனித தீா்த்தக்குடங்கள் கோபுரத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிவாச்சாரியாரால் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

விழாவில், ஆலை தலைவா் ஹரிகிஷோா் மற்றும் அதிகாரிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மக்கள் தொடா்பு அலுவலா் அடைக்கப்பன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT