கரூர்

கள் இறக்குவதற்கான தடையை நீக்க விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கரூரில், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. மாநிலத் தலைவா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவா் பாலுகுட்டி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், பிப். 2-தேதி திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் நடைபெறும் உழவா் தலைவா் நாராயணசாமியின் நூறாம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கரூா் மாவட்டத்திலிருந்து விவசாயிகள் திரளாக கலந்து கொள்வது, பாமாயில் இறக்குமதிக்கு தடை செய்து, தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் விநியோகிப்பது, கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். எருமை பால் லிட்டா் ரூ.60க்கும், பசும்பால் லிட்டா் ரூ.50க்கும் விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில அமைப்பாளா் மயில்சாமி, பிரசார குழுத் தலைவா் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT