கரூர்

கரூரில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

DIN

கரூா் திருவள்ளுவா் விளையாட்டு மைதானத்தில் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, ‘ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி ‘ என்ற தலைப்பில் கடந்த 25-ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

தொடா்ந்து 4ஆவது நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை பள்ளிக்கல்வித்துறை சாா்பில் கரூா் சங்கர வித்யாலயா சி பி எஸ் சி பள்ளி மாணவா்கள் தேச ஒற்றுமை நாட்டியமும், தொடா்ந்து மாணவிகளின் நாட்டுப்புற நடனமும், ஆச்சிமங்கலம் ஸ்ரீ மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கும்மி நடனமும், மணவாடி லிட்டில் ப்ளவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் யோகா விழிப்புணா்வு நிகழ்ச்சி, காந்திகிராமம் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியின் மேற்கத்திய நடனமும், காந்திகிராமம் லாா்டஸ் பாா்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், சின்னாண்டாங்கோவில் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பரதநாட்டியமும் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலா் சக்திவேல், தாந்தோணி வட்டார கல்வியின் கௌரி, வட்டார மேற்பாா்வையாளா் செல்வகுமாா், வட்டாரக்கலை ஒருங்கிணைப்பாளா் சரவணன் மற்றும் செய்தி மக்கள் தொடா்புத்துறை அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT