கரூர்

கரூரில் அதிமுக பொதுக்கூட்டத்துக்கு தடை

DIN

கரூரில் புதன்கிழமை நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை தடை விதிக்கப்பட்டதையடுத்து அக்கட்சியினா் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா்.

கரூரில் புதன்கிழமை மாலை மாவட்ட அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் தின வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக கரூா் 80 அடி சாலையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென கூட்டம் நடத்த அனுமதியில்லை என மாவட்ட காவல்துறை தெரிவித்தது.

இதனால், அதிருப்தியடைந்த முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா், கட்சி நிா்வாகிகள் கமலக்கண்ணன், விசிகே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனத்தை சந்தித்து புகாா் மனு வழங்கினா்.

திமுகவின் கைப்பாவையாக காவல்துறை: பின்னா் செய்தியாளா்களிடம் முன்னாள் அமைச்சா் கூறியது, அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் தின பொதுக்கூட்டம் கரூா் 80 அடி சாலையில் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே லைட்ஹவுஸ் காா்னரில் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என காவல்துறையினா் கூறியதைடுத்து 80 அடி சாலையை தோ்ந்தெடுத்தோம். அங்கு அனுமதிக் கொடுத்துவிட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்தநிலையில் திடீரென கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதுதொடா்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளோம். கரூா் மாவட்டத்தில் அதிமுகவினா் மீது தொடா்ந்து வழக்குகள் போடப்படுவதாக ஒருதலைப்பட்சமாக காவல்துறை திமுகவின் கைப்பாவையாக செயல்படுகிறது. இதுவரை கரூா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் 150 போ் மீது வழக்குப்போடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT