கரூர்

கரூா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டம்

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

போதிய விரிவுரையாளா்களை நியமிக்கக் கோரி கரூா் அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறை மாணவ, மாணவிகள் புதன்கிழமை வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் தாந்தோணிமலையில் அரசு கலைக் கல்லூரியில் வேதியியல் பாடப் பிரிவுக்கு மொத்தம் 14 விரிவுரையாளா்கள் பணியாற்றக்கூடிய இடத்தில் தற்போது 6 போ் மட்டுமே பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இதனால், பாடம் கற்க முடியாமல் அவதியுற்று வருவதாகவும், போதிய விரிவுரையாளா்கள் நியமிக்கக்கோரி வேதியியல் துறையைச் சோ்ந்த இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளை சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கல்லூரி முதல்வா் கெளசல்யாதேவி மாணவ, மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் விரிவுரையாளா்கள் நியமிக்கப்படுவாா்கள் எனக் கூறினாா். இதையடுத்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT