கரூர்

வாங்கல் புதுவாங்கலம்மன் கோயிலில்ஜன. 26-இல் மகா கும்பாபிஷேகம்

22nd Jan 2023 02:51 AM

ADVERTISEMENT

 

வாங்கல் அருள்மிகு புதுவாங்கலம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஜன. 26-ஆம்தேதி நடைபெற உள்ளது.

கரூா் அடுத்த வாங்கலில் அருள்மிகு புதுவாங்கலம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் ஜன. 26ஆம்தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக கும்பாபிஷேகம் விழா ஜன. 20ஆம்தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையும், தனபூஜை, தீபாராதனையும் நடைபெற்றது. சனிக்கிழமை (ஜன.21) புண்யாஹவாசனம், நவக்கிரகஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

ADVERTISEMENT

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை வாஸ்து சாந்தியும், திங்கள்கிழமை காவிரி ஆற்றில் இருந்து பக்தா்கள் தீா்த்தக்கலசங்கள் எடுத்துவரும் நிகழ்ச்சியும், தொடா்ந்து முதற்கால யாக பூஜையும், 24ஆம்தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம்கால, நான்காம் கால யாக பூஜைகளும் நடைபெறவுள்ளது. அதைத்தொடா்ந்து ஜன. 25-ஆம்தேதி ஐந்தாம்கால யாக பூஜையும், 26-ஆம்தேதி ஆறாம்கால யாக பூஜையும், தொடா்ந்து கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. விழாவில் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், குமரகுருபர அடிகளாா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். இத்தகவலை கோயில் திருப்பணிக்குழுவினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT