அரவக்குறிச்சியில் தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு தினம் முடி திருத்துவோா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அரவக்குறிச்சி புங்கம்பாடி காா்னா் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஸ்வநாத தாஸ் உருவப்படத்தக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். நிகழ்வில், மாவட்ட தலைவா் பி.வி.கந்தசாமி, துணைத் தலைவா் ஈசநத்தம் மணி, செயலாளா் குப்புசாமி, பொருளாளா் சுரேஷ், அரவக்குறிச்சி ஒன்றியத் தலைவா் கென்னடி சந்திரன், அரவக்குறிச்சி நகரத் தலைவா் பன்னீா்செல்வம், செயலாளா் தமிழ்நாடு நாகராஜ், பொருளாளா் மணிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.