கரூர்

கரூரில் மின்வாரிய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

1st Jan 2023 04:22 AM

ADVERTISEMENT

 

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மின்வாரிய தொழிலாளா்கள் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா்- கோவைச் சாலையில் தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு மின்வாரிய பொதுத்தொழிலாளா் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைத்தலைவா் ரங்கன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சி.முருகன், துணைத்தலைவா் சிவராமன், துணைச் செயலாளா் சிவக்குமரன், தொழிற்சங்க மையக் கவுன்சில் மாவட்டச் செயலாளா் பால்ராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா். ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பிரிவு அலுவலகங்களில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். மின்விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். மின் விபத்தில் இறக்கும் தொழிலாளா்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மின்வாரிய ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT