தமிழ்நாடு

ஜூலை 2 முதல் பொறியியல் கலந்தாய்வு: பொன்முடி

19th May 2023 12:19 PM

ADVERTISEMENT


பொறியியல் கலந்தாய்வு ஜூலை இரண்டாம் தேதி முதல் நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே ஆகஸ்ட் 2 முதல் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் ஒரு மாதம் முன்னதாக நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கல்லூரிகள் திறந்திருக்கும். 

அனைத்து அரசு அறிவியல், கலை கல்லூரிகளில் நுழைவுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.200ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

பாலிடெக்னிக், பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு நாளைமுதல் தொடங்குகிறது.     

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க 3 நாள்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT