தற்போதைய செய்திகள்

ராணிப்பேட்டை பாலாற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு: செத்து மிதக்கும் மீன்கள்..! 

18th May 2023 11:59 AM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாலாற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலந்து வருவதால் மீன்கள் சொத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கோடை மழையால் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பாலாற்றில் தண்ணீர் செல்லும் நிலையில் மழை நீருடன் தொழிற்சாலை கழிவுநீர் கலந்துள்ளதால் நன்னீரில் ரசாயன நச்சு கழிவு நீரின் வீரியம் தாங்காமல் ஆயிரக்கணக்கான மீன்கள் சொத்து மிதக்கின்றன. இதனால் அச்சமடைந்த மக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், பாலாற்றில் இருந்து தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பல ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில் கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகள் தொழிற்சாலை கழிவு நீரால் மாசடையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

இந்த பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT