தமிழ்நாடு

சேலம்: கூலித் தொழிலாளி தலையில் தாக்கி படுகொலை

17th May 2023 12:49 PM

ADVERTISEMENT

சேலம்: சேலத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் தலையில் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் பொன்னம்மா பேட்டை அடுத்த செங்கல் அணை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகணபதி (42). இவரின் மனைவி மீனாவை பிரிந்து பெற்றோருடன் செங்கல் அணை பகுதியில் உள்ள தங்களது வீட்டில் வசித்து வந்தார்.

இவரின் மேல் தளத்தில் அண்ணன் செல்வம் அவரின் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பெற்றோர் பெயரில் உள்ள வீட்டை இரண்டு பாகமாக பிரித்து அண்ணனுக்கும் தனக்கும் வழங்க வேண்டும் என்று ராஜகணபதி கூறிவந்துள்ளார். அதற்கு அவரின் அண்ணன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனை அடுத்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர்.

புகார் தொடர்பாக விசாரணை நடந்துவரும் நிலையில் நேற்று இரவும் சொத்து தகராறு காரணமாக ராஜகணபதி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை வீட்டின் கீழ் தளத்தில் தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக ராஜ கணபதி கிடந்துள்ளார்.

ADVERTISEMENT

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார், ராஜ கணபதியின் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அம்மாபேட்டை போலீசார் கொலை செய்தது யார்? சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : murder salem
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT