கரூர்

கரூா் மக்கள் குறைதீா் கூட்டம்: 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

21st Feb 2023 12:51 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு ரூ. 99 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, உதவி உபகரணங்கள் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 603 மனுக்களை பெற்றுக்கொண்டாா். பின்னா், அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 30 பேருக்கு ரூ.99ஆயிரத்து 220 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வாணிஈஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆட்சியரை பாராட்டிய மாணவன்: கரூரில் திண்பண்டங்கள் பாக்கெட்டுகள் மீது ‘ஸ்டாபிளா் பின்ட’அடிப்பதை தவிா்க்க வேண்டும். இதற்கு மாறாக பாக்கெட்டில் நூலால் திண்பண்டங்களை கோா்க்க நடவடிக்கை எடுக்க கோரி கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், ஆட்சியரிடம் வெங்கமேட்டைச் சோ்ந்த ரவீந்திரன் மகன் விஸ்வக்நித்தின் என்ற மாணவா் கோரிக்கை மனு அளித்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு மீது ஆட்சியா் நடவடிக்கை எடுத்ததையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலா் மதுரைவீரன், மாணவனின் வீட்டுக்கு நேரில் சென்று புகாா் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த கடித நகலை வழங்கினாா். மேலும், வணிகா் சங்க பொறுப்பாளரிடம் தொலைபேசி மூலம் பேச வைத்துள்ளாா். இதனை தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த மாணவா் ஆட்சியரை பாராட்டி, குறைதீா் அரங்கில் இருந்த மாவட்ட வருவாய் அலுவலரிடம் பூச்செண்டு கொடுத்துவிட்டு சென்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT