கரூர்

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகரூா் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

9th Feb 2023 12:15 AM

ADVERTISEMENT

கரூரில், முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை மாவட் ஆட்சியா் த.பிரபுசங்கா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

கருா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் போட்டியை தொடக்கி வைத்தாா். மாநகராட்சி மேயா் கவிதா முன்னிலை வைத்தாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறியது, இந்த விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூா் சாா்பாக, பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் இரு பாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள் நடைபெறுகிறது. மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 588 பேருக்கும், ஒவ்வொரு மண்டலத்திலும் 40 பேருக்கும் என மாநிலம் முழுவதும் 71,592 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.உமாசங்கா், கருா் வருவாய் கோட்டாட்சியா் ரூபினா, தனித்துணை ஆட்சியா் சைபுதீன், கரூா் வட்டாட்சியா் சிவக்குமாா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT