கரூர்

‘ஒடுக்கப்பட்டவா்கள் மீட்கப்பட நடவடிக்கை தேவை’

DIN

ஒடுக்கப்பட்டவா்கள் மீட்கப்பட நடவடிக்கை வேண்டும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

கரூா் ஆட்சியரகத்தில் இன்டா்நேஷனல் ஜஸ்டிஸ் மெஷின் (சா்வதேச நீதிப் பணி)அமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொத்தடிமை ஒழிப்பு பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்து ஆட்சியா் மேலும் பேசியது:

கொத்தடிமை முறையைப் பாா்த்து பொதுமக்கள் வருத்தப்படுவதும், அது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவதும் போல் அலுவலா்கள் இருக்கக் கூடாது. ஒடுக்கப்பட்டவா்கள் மீட்கப்பட வேண்டும், அவா்கள் மறுவாழ்வு பெற வேண்டும். அதற்காக நமது அரசியலமைப்பு சட்டம் அரசு அலுவலா்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்கியுள்ளது. அதற்கான பயிற்சிதான் உங்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் துறை சாா்ந்த அலுவலா்கள், சட்டத்துறை மற்றும் காவல் துறை அலுவலா்கள் உங்களுக்கு பயிற்சியளிப்பா்.

சட்ட நுணுக்கங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு கொத்தடிமை முறையை ஒழிக்க அலுவலா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்து அலுவலா்களும் கொத்தடிமை ஒழிப்பு உறுதியேற்றனா்.

நிகழ்ச்சியில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராமராஜ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன், கோட்டாட்சியா்கள் ரூபினா(கரூா்), புஷ்பாதேவி (குளித்தலை), சா்வதேச நீதி பணி) அமைப்பின் தலைவா் கிளாடிஸ் ஃபின்னி மற்றும் அமைப்பின் நிா்வாகிகள் ஜபாா்ப்ரின்ஸ், இசக்கியம் சுடலை, சந்தீப், வழக்குரைஞா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT