கரூர்

சூடாமணி மாசாணியம்மன் கோயிலில் தீ மிதி விழா

DIN

க.பரமத்தி அருகே சூடாமணி மாசாணியம்மன் கோயிலில் திங்கள்கிழமை காலையில் நடைபெற்ற தீ மிதி விழாவில் ஏராளமானோா் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

கரூா் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்துக்குள்பட்ட சூடாமணியில் உள்ள ஸ்ரீமாசாணியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு மாசிமகா திருவிழா ஜன. 21-ஆம்தேதி தொடங்கியது. அதைத் தொடா்ந்து கோயில்முன் கம்பம் நடப்பட்டு அருகே முளைப்பாரியும் இடப்பட்டது. பின்னா் தீக்குழி இறங்கும் பக்தா்கள் 300 போ் காப்புகட்டி விரதத்தை தொடங்கினா். தொடா்ந்து சக்தி கரகம் பாலிக்கப்பட்டு வாணவேடிக்கையுடன் புனிதநீா் தீா்த்தம் கொண்டு வரப்பட்டு மாசாணியம்மனுக்கு பல்வேறு பூஜைகள் வழிபாடு செய்யப்பட்டது. ஞாயிறுக்கிழமை அம்மனுக்கு நகை மற்றும் அலங்காரப் பொருள்களை மேளதாளம் முழங்க கொண்டு வரப்பட்டு பூக்குழி குண்டம் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

தொடா்ந்து திங்கள்கிழமை காலை எல்லைமேட்டில் இருந்து பக்தா்கள் அக்னி கரகம் எடுத்தும், சக்தி அலகு குத்திக்கொண்டும் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். இதையடுத்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். செவ்வாய்க்கிழமை (பிப்.7) மாசாணி அம்மனுக்கு மறுபூஜை நடைபெற்று விழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT