கரூர்

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வு ஊதியா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் கரூா் மாவட்டம் தரகம்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடவூா் ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் மாரிமுத்து தலைமை வகித்தாா். சங்க நிா்வாகி பழனி முன்னிலை வகித்தாா்.

இதில், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு குறைந்த பட்ச ஓய்வு ஊதியம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். தற்போது பணியாற்றி வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களை, தமிழ்நாடு அரசு காலிப்பணியிடங்களை நிரப்பும் போது 50 சதவீதம் என்ற வீதத்தில் பணிமூப்பு அடிப்படையில் பணி அமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள் மலைக்கொழுந்தன், பெத்தகுட்டி, ஏழுமலை, ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT