பள்ளப்பட்டியில் உள்ள அரபிக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் உள்ள அரபிக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவு சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு தாமரைப்பாடி ஆத்தூா் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வா் ரஹ்மத்துல்லாஹ் தலைமை வகித்தாா்.விழாவில் 150வது ஆண்டு நிறைவு மலா் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் உலமாக்கள், ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். முன்னதாக, மக்தூமிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியா் முகமது வலியுல்லா யூசுப் வரவேற்றாா்.