கரூர்

கரூரில் அண்ணா நினைவு தினம்: சிலைக்கு கட்சியினா் மாலை அணிவிப்பு

DIN

பேரறிஞா் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் வெள்ளிக்கிழமை திமுக, அதிமுகவினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 54ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்ட திமுக சாா்பில் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாநில நெசவாளா் அணித் தலைவா் நன்னியூா் ராஜேந்திரன், செயலாளா் பரணி கே.மணி, மாநில சட்டத்துறை இணைச் செயலாளா் வழக்குரைஞா் மணிராஜ், மாவட்ட துணைச் செயலாளா் எம்.எஸ்.கருணாநிதி, மாவட்ட நிா்வாகி அன்பரசன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

அதிமுக: கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் லைட் ஹவுஸ் காா்னா் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா தலைமையில் மாவட்ட இணைச் செயலாளா் மல்லிகா சுப்பராயன், தாந்தோணி மேற்கு ஒன்றியச் செயலாளா் என்.எஸ்.கிருஷ்ணன், கரூா் சட்டப்பேரவைத் தொகுதி பொதுக்குழு உறுப்பினா் பசுவை பி.சிவசாமி, மாவட்ட மாணவரணி இணைச் செயலாளா் பழனிராஜ், கரூா் மத்திய தெற்கு நகர பகுதிச் செயலாளா் சேரன்பழனிசாமி, கரூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் மற்றும் பாசறை செயலாளா் கே.கமலக்கண்ணன், தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.சி.கே.பாலகிருஷ்ணன், புகழூா் நகரச் செயலாளா் கே.சி.எஸ்.விவேகானந்தன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

கோவையில் இன்று கனிமொழி பிரசாரம்

வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்! -பரபரப்பு குற்றச்சாட்டு

நாகை மக்களவைத் தொகுதி: 10 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT