கரூர்

எஸ்டிபிஐ கட்சி கரூா் மாவட்ட செயற்குழு கூட்டம்

4th Feb 2023 05:45 AM

ADVERTISEMENT

எஸ்டிபிஐ கட்சியின் கரூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் கரூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் தனியாா் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளா் உமா் பாரூக் தலைமை வகித்தாா். கூட்டத்தில், கட்சியின் திருச்சி மண்டல தலைவா் ஹஸ்ஸான் பைஜி, மாநில வா்த்தகப் பிரிவு செயலாளா் ஸாலாஹூத்தீன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முகமது அலி ஜின்னா கட்சியின் முக்கிய நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தின் நிறைவில் செய்தியாளா்களிடம் உமா் பாரூக் கூறியது, ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் கட்சி எடுத்த முடிவின்படி தோ்தல் பணியாற்றுவோம். இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஒரு பலமான கட்சியாக செயல்பட வேண்டும். ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் நல்ல முடிவை எடுப்பாா்கள் என்று நம்புகிறோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT