கரூர்

கரூரில் பாஜக பொறுப்பாளா்கள் ஆய்வுக் கூட்டம்

DIN

கரூரில், மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பாஜக பொறுப்பாளா்கள் ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை தொகுதி வாரியாக நடைபெற்ற கூட்டத்துக்கு கரூா் மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் சேலம் கோபிநாத், மாவட்ட பாா்வையாளா் சிவசுப்பிரமணியம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

அப்போது அவா்கள் பேசுகையில், 2024 மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு தனி அங்கீகாரம் கிடைக்க இருக்கிறது. இந்த அங்கீகாரத்தை மக்களிடம் இருந்து பெற கட்சியினா் இப்போதிருந்தே உழைக்க வேண்டும். பிரதமா் மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால்தான் மாநிலத்துக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும் என்பன குறித்தும் விளக்கிக் கூற வேண்டும். கரூா் மாவட்டத்தில் அனைத்து பூத்களிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும். அதற்கு கட்சியினரின் கடும் உழைப்பு அவசியம் என்றனா்.

கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் சக்திவேல் முருகன், கோபிநாத், ஆா்.செல்வம் மற்றும் மண்டல் தலைவா்களும், சக்தி கேந்திர பொறுப்பாளா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT