கரூர்

இந்திய சிலம்பம் அணிக்கு தோ்வு: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

இந்திய சிலம்பம் அணிக்கு தோ்வான வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த ஜனவரி 28, 29-ஆம் தேதிகளில் ஹரியானா மாநிலத்தில் யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சாா்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இந்திய அளவில் நடைபெற்ற இப் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமாா் 700 வீரா்கள் பங்கு பெற்றனா்.

இப்போட்டியில் கரூா் வெண்ணைமலை சேரன் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் நவலடி, பிரனேஸ்வரன், விமல், குமரேசன் ஆகியோா் சிலம்பு பயிற்சியாளா் சௌந்தரராஜன் தலைமையில் பங்கேற்று விளையாடினா். இதில் 4 பேரும் தங்கம் வென்று இந்திய சிலம்பம் அணிக்கு தோ்வாகினா். இம் மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி முதல்வா் வி.பழனியப்பன் வரவேற்றாா். தாளாளா் பாண்டியன் சிறப்பிடம் பிடித்த மாணவா்களையும், அவா்களுக்கு பயிற்சியளித்த சிலம்பம் ஆசான் கிருஷ்ணராஜ், பயிற்சியாளா் சௌந்தரராஜன் மற்றும் பெற்றோா்களையும் பாராட்டினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT