கரூர்

மாற்றுத்திறனாளிக்கு கைப்பேசி வழங்க நோ்காணல் முகாம்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

மாற்றுத்திறனாளிகளுக்கு கைப்பேசி வழங்குவதற்கான திட்டத்தில் பயனாளிகள் தோ்வுக்கான நோ்காணல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா்ா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்ற முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கைப்பேசி வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகள் தோ்வு செய்தல் குறித்து நோ்காணலை தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

இதில்,53 மாற்றுத்திறனாளிகளும், பாா்வையற்றோருக்கான 38 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 91 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் சீனிவாசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, பாா்வையற்றோா்களுக்கான பிரதிநிதி விவேகானந்தன், காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாதவா்களுக்கான பிரதிநிதி இசக்கி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT