கரூர்

மொ.தொட்டம்பட்டி அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

DIN

க.பரமத்தி அருகே மொ.தொட்டம்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட தமிழக முதல்வா் காணொலியில் புதன்கிழமை காலை அடிக்கல் நாட்டினாா்.

தமிழக முதல்வா் புதன்கிழமை வேலூா் காட்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவை காணொலியில் தொடக்கி வைத்தாா்.

இதில், கரூா் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய மொ.தொட்டம்பட்டி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு காணொலி காட்சி மூலம் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னா் ஆட்சியா் கூறுகையில், இந்தத் திட்டத்தில் கரூா் மாவட்டத்துக்கு 24 பள்ளிகளுக்கு ரூ.10.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.4.75 கோடி மதிப்பில் 32 புதிய பள்ளி வகுப்பறை கட்டடங்களும், ரூ.5.61கோடி மதிப்பீட்டில் 29 கூடுதல் வகுப்பறை கட்டடங்களும், கட்டப்பட உள்ளது. ப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு வேலை உத்தரவுகளுக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வாணிஈஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, ஊரக வளா்ச்சி பொறியாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT