கரூர்

கரூா் அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநா் மீது வழக்கு

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கரூா் அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் அரசு கலைக்கல்லூரியில் ஜன. 25-ஆம்தேதி தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் பங்கேற்றாா். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஆட்சியா் வெளியே வரும்போது, அரசு கலைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ராஜேந்திரன் ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கரூா் வட்டாட்சியா் சிவக்குமாா் தாந்தோணிமலை போலீஸில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT