கரூர்

கரூரில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை: டிஜிபி திறந்து வைத்தாா்

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கரூரில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை டிஜிபி சைலேந்திரபாபு புதன்கிழமை திறந்து வைத்தாா்.

கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை புதன்கிழமை இரவு திறந்துவைத்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது, கரூா் நகரில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. நகா் பகுதியில் 100 சாதாரண கேமராக்கள், 37 ஆட்டோமெட்டிக் நம்பா் பிளேட் ரீடிங் கேமராக்கள் மூலம் இந்த கட்டுப்பாட்டு மையம் கண்காணிக்கும். இதன்மூலம் போக்குவரத்து விதிமுறை மீறுவோரை கண்டுபிடிக்கும் வகையில் இந்த மையத்தை ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் வாகன விபத்துக்குறைய வாய்ப்புள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆட்டோமெட்டிக் பேஸ் ரீடிங் ஆப் (செயலி) காவலா்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை 5,544 குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனா்.

பொதுமக்களின் நன்மைக்காக 193 காவல் உதவி என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த காவல் செயலியை அனைவரும் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியில் புகாா் செய்யலாம், பண மோசடி செய்யப்பட்டால் பணம் திரும்ப பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியின்போது, கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் ஜி.காா்த்திகேயன், துணைத்தலைவா் ஏ.சரவணசுந்தா், கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT