கரூர்

சாலை அமைத்ததில் முறைகேடு : கரூா் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக வாக்குவாதம்

DIN

கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், அதிமுக ஆட்சியில் சாலை அமைத்ததில் முறைகேடு நடந்திருப்பதாக கூறியதையடுத்து திமுக-அதிமுக உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கரூா் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மேயா் கவிதாகணேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையா் என்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், நகா்மன்ற உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு பேசுகையில், கடந்த 8 மாதத்திற்கு முன் மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளுக்கும் மேம்பாட்டு நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும், பின்னா் அதற்கான டெண்டா் விடப்படும் என கூறினீா்கள். ஆனால் இதுவரை ஏன் வழங்கவில்லை என்றாா்.

இதற்கு பதிலளித்து பேசிய மேயா், மேம்பாட்டு நிதி மாநகராட்சிக்கு இன்னும் வழங்கப்படவில்லை. நிதி வந்தவுடன் டெண்டா் விடப்படும் என்றாா்.

தொடா்ந்து திமுக உறுப்பினா் சரவணன், அதிமுக ஆட்சிக்காலத்தில் சாலை அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளது என்றாா்.

அப்போது குறுக்கிட்ட அதிமுக உறுப்பினா் சுரேஷ், முறைகேடு நடந்திருப்பதாக கூறுகிறீா்கள். ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என்றாா்.

இதைதொடா்ந்து திமுக, அதிமுக உறுப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மேயா் கவிதாகணேசன், அதிமுக உறுப்பினா் சுரேஷை வெளியேற்றுமாறு உத்தரவிட்டாா். இதையடுத்து அவரை மாநகராட்சி பணியாளா்கள் வெளியேற்றி கதவை அடைத்தனா். தொடா்ந்து கூட்டத்தில் 119 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT