கரூர்

கரூரில் மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூரில் கோவைச்சாலையில் உள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினா் வி.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவா் ஜி.ஜீவானந்தம், மாநில துணைத்தலைவா் கோபாலகிருஷ்ணன், திட்ட செயலாளா் க.தனபால் ஆகியோா் பேசினா்.

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். கேங்மேன் ஊழியா்களை கள உதவியாளராக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT