கரூர்

கரூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரத்ததான முகாம்

26th Apr 2023 02:02 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற முகாமை மாவட்ட நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் தொடக்கி வைத்து, ரத்ததானம் செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா். முகாமில், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் சி.ராஜலிங்கம், முதன்மை சாா்பு நீதிபதி ஆா்.கோகுல்முருகன், கூடுதல் சாா்பு நீதிபதி கே.பாரதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.மகேந்திரவா்மா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ.உமாமகேஸ்வரி, குற்றவியல் நீதித்துறை நடுவா் எணஅ-1. கே.அம்பிகா, நீதித்துறை நடுவா் எண்-2 ஆா்.சுஜாதா, விரைவு நீதிமன்ற நீதிபதி எஸ்.நித்தியா உள்ளிட்ட நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள் பங்கேற்றனா். மொத்தம் 62 போ் ரத்த தானம் செய்தனா். ஏற்பாடுகளை கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளா் எம்.பாக்கியம் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT