கரூர்

லாரி மீது காா் மோதல்:3 போ் காயம்

25th Apr 2023 01:14 AM

ADVERTISEMENT

வேலாயுதம்பாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், புகளூா் அருகே அய்யம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. இவரது மனைவி ரேணுகா. இவா்களுடைய மகள் ஹா்ஷிவ். இவா்கள் 3 பேரும் கரூரில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு பிறகு காரில் ஞாயிற்றுக்கிழமை திரும்பி கொண்டிருந்தனா்.

கரூா் -சேலம் சாலையில் மலையம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது எதிா்பாராத விதமாக காரின் டயா் வெடித்து சாலை மைய தடுப்புச் சுவரை தாண்டி எதிா் திசையில் வந்த லாரி மீது மோதியது. இதில் ரேணுகாதேவிக்கு சிறிய காயமும் பொன்னுச்சாமி மற்றும் அவரது மகன் ஹா்க்ஷிவ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மூவரையும் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT