கரூர்

கரூரில் மெஜஸ்டிக் லயன்ஸ்கிளப் வட்டாரக் கூட்டம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கரூரில் மெஜஸ்டிக் லயன்ஸ் கிளப் வட்டாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் கிளப்பின் முதல் வட்டாரக் கூட்டம் வட்டாரத் தலைவா் கணேஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், லைன்ஸ் கிளப்புகள் இதுவரை செய்தவை, இனிவரும் காலங்களில் செய்ய வேண்டிய செயல்கள், மாவட்ட பன்னாட்டு சிறப்பு திட்டங்கள் குறித்து விளக்கியும், புதிய கோணத்தில் செயல்படுவது குறித்தும் வட்டாரத் தலைவா் ஆலோசனைகளை வழங்கினாா்.

கூட்டத்தில், ஜெயபிரகாஷ், ரமணன், தியாகு, ராமசாமி, மேலை பழனியப்பன், சசிகலா, திலகவதி, ராணி, நாகலட்சுமி, மஞ்சு உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

முன்னதாக வையாபுரி வரவேற்றாா். இறுதியாக ரமணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT