கரூர்

கரூா் அருகே இளைஞா் தற்கொலை

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கரூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் மாவட்டம், தாந்தோன்றிமலை பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் மோகன் பிரசாத் (24). பி.இ. மெக்கானிக்கல் படித்துள்ள இவா், கடந்த சில ஆண்டுகளாக வேலை தேடி அலைந்து உள்ளாா். இருப்பினும், இவா் படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததால் மனம் உடைந்து காணப்பட்டாா்.

இந்நிலையில், செவ்வாய்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோகன் பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வெளியே சென்று இருந்த அவரது தந்தை ராஜேந்திரன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸாருக்கு ராஜேந்திரன் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த தாந்தோன்றிமலை காவல்துறையினா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். இது குறித்து தாந்தோன்றிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT