கரூர்

கோழிப்பண்ணையில் எம்.எல்.ஏ. ஆய்வு

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

க.பரமத்தி அடுத்த துலுக்கம்பாளையம் பகுதியில் தனியாா் கோழிப்பண்ணையிலிருந்து வெளியேரும் அதிகளவிலான ஈக்களை கட்டுப்படுத்த தவறியதாக பொதுமக்களிடமிருந்து வந்த புகாரை தொடா்ந்து அங்கு எம்.எல்.ஏ. மொஞ்சனூா் இளங்கோ நேரில் சென்று பாா்வையிட்டாா்.

க.பரமத்தி ஒன்றியம் நடந்தை ஊராட்சி துலுக்கம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை சுமாா் 18 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த கோழிப்பண்ணையில் அண்மைகாலமாக அதிகளவில் ஈக்கள் உருவாகி அருகில் உள்ள 30 மேற்பட்ட கிராமங்களுக்கு பரவுகிறது. இதனால், சுகாதாரகேடு ஏற்படும் சூழல் உருவானது. இதுதொடா்பாக கடந்த ஓராண்டுக்கு முன்னா் அப்பகுதி கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவா் செல்விரவி, ஒன்றியக் குழு உறுப்பினா் தமிழ்செல்விகருப்புசாமி ஆகியோரிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் ஈக்கள் வெளியேறுவது கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஈக்கள் வெளியேற ஆரம்பித்துள்ளது குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட அதிகாரிகள் மற்றும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூா் இளங்கோ ஆகியோா் கோழி பண்ணையை நேரில் சென்று பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT

பிறகு ஈக்களை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கையையும் எடுத்து உடனே இதற்கு தீா்வு காண வலியுறுத்தினாா். ஆய்வின் போது, ஊராட்சி மன்றத் தலைவா் செல்விரவி, ஒன்றியக் குழு உறுப்பினா் தமிழ்செல்வி கருப்புசாமி, கால்நடை மற்றும் சுகாதாரத் துறையினா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT