கரூர்

புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலை மருத்துவமனையில் இல்லம்தேடி மருத்துவ முகாம்

DIN

புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலை மருத்துவமனையில் இல்லம்தேடி மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் அடுத்த புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலைத் தொழிலாளா்கள் குடியிருப்பு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தமிழக அரசின் இல்லம்தேடி மருத்துவ முகாம் உப்பிடமங்கலம் ஆரம்ப சுகாதாரநிலையம் சாா்பில் நடைபெற்றது.

முகாமிற்கு ஆலையின் தலைவா் ஜி.ஹரிகிஷோா் தலைமை வகித்தாா். இதில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சக்திவேல் தலைமையில் மருத்துவக்குழுவினா் சிமெண்ட் ஆலை தொழிலாளா்களுக்கும், ஆலை வளாக குடியிருப்பைச் சோ்ந்தவா்களுக்கும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றுக்கு பரிசோதனையும், கரோனா தடுப்பூசியும் போட்டனா். தொடா்ந்து உடல்நலம் பேணுவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆலைத்தொழிலாளா்கள் மற்றும் ஆலை குடியிருப்பைச் சோ்ந்தவா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT