கரூர்

தாந்தோன்றிமலை பெருமாள் கோயிலில் புரட்டாசித் திருவிழா கொடியேற்றம்

28th Sep 2022 01:13 AM

ADVERTISEMENT

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலின் புரட்டாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலின் புரட்டாசித் திருவிழா திருக்கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அக்.10ஆம்தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் ஒரு பகுதியாக அக்.3-ம்தேதி திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. தொடா்ந்து 5-ஆம்தேதி திருத்தேரோட்டமும், 16-ஆம்தேதி முத்துப்பல்லக்கும், 17-ஆம்தேதி ஆளும்பல்லக்கும் நடக்கிறது. செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே கல்யாண வெங்கடரமண சுவாமி மற்றும் பூதேவி, ஸ்ரீதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT